ரசிகர் மன்றத்திற்குள் அரசியல் புகுந்து விட்டது என்றதும் மன்றத்தையே கலைத்தவர் அஜித். என்றாலும், அவரை ரசிகர்கள் விடுவதாக இல்லை. ரசிகர் மன்றம் என்ற ஒன்று இல்லாமலேயே அஜித் படங்கள் வெளியாகும்போது கட்அவுட் பேனர்கள் வைத்து வருகிறார்கள். அதோடு அவர் நடிக்கும் படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் என வெளியாகும்போது இணையதளங்களில் டிரென்டிங்காக்கி வருகிறார்கள்.
அந்த அளவுக்கு அஜித்தை சுற்றி தானா சேர்ந்த கூட்டமாக இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அதோடு அவரை எங்காவது வெளி இடங்களில் பார்த்து விட்டால் அவருடன் நின்று செல்பி, போட்டோ எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் ரசிகர்கள்.
சமீபத்தில் ஒரு பொது இடத்தில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டார்களாம். அப்போது ரசிகர்களின் அலைப்பேசியை வாங்கி செல்பி எடுத்துள்ளார். ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர்.

