இந்தாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ் ஒப்பன் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவுள்ளது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா வீராங்கனைகள் ஸ்டீஃபென்ஸ் மற்றும் மேடின்சன் கீ ஆகியோர் மோதினர். அதிகம் எதிர்பார்க்கபட்ட இந்த போட்டி, வெறும் 61 நிமிடங்களில் முடிந்து விட்டது. ஸ்டீஃபென்ஸ் இந்த போட்டியில் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று முதன் முறையாக கிரண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் நடால் மற்றும் ஆண்டர்சன் மோதுகின்றனர். முன்னணி வீரர்கள் வெளியேறி விட்ட நிலையில் தற்போது நடால் தென்னாபிரிக்காவை சேர்ந்த ஆண்டர்சனை எதிர்த்து விளையாடுகிறார். நடால் எளிதில் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் கணித்தாலும் ஆண்டர்சன் முன்னணி வீரர்களை தோற்கடித்து தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு நடைபெறும் இந்த இறுதி போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டமும் இன்று இரவு நடைபெறுகிறது. கடந்த மாதம் தொடங்கிய இந்த தொடர் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்துடன் நிறைவு பெறுகிறது.