ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் கணவர் முருகனை சந்திக்கவுள்ள தடையை திரும்ப பெறக் கோரி ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் நளினி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார். கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.