இசையமைப்பாளர் அனிருத், அவ்வப்போது வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். முதன்முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
வரும் ஜூன் 16ம் தேதி லண்டனில் உள்ள வெம்ப்ளி அரெனா என்னுமிடத்திலும், 17ம் தேதி பாரீஸ் நகரில் ஜெனித் என்னுமிடத்திலும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதுவரை இங்கு எந்த தமிழ் இசை கலைஞரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது இல்லை.
நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தமிழ் பாடல்களை பாட இருக்கிறாராம் அனிருத். டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் துவங்குகிறது. ஏற்பாடுகளை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றனர்.