மலையாள சினிமாவில் இரட்டை கதாசிரியர்கள் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கும் சாச்சி-சேது இருவரில், சாச்சி தனியாக கதை எழுதி, பிருத்விராஜை வைத்து ‘அனார்கலி’ என்கிற படத்தை இயக்கி நூறு நாட்கள் ஓடும் வெற்றிப்படமாக்கினார். இப்போது இன்னொருவரான சேது மம்முட்டியை ஹீரோவாக வைத்து இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்தப்படத்தில் ஐந்தாவது முறையாக மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் லட்சுமி ராய். இந்தபடத்திற்கு முதலில் ‘கோழி தங்கச்சன்’ என பெயர் வைத்தனர். இப்போது அதை மாற்றி ‘ஒரு குட்டநாடன் பிளாக்’ என டைட்டில் வைத்துள்ளனர். இந்தப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இன்னொரு நடிகரான உன்னிமுகுந்தன், இந்தப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.