கேரளாவில் வெள்ள நிவாரண பணிகளில் மருத்துவர்கள் குழு இரவு பகல் பாராமல் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது. இந்தநிலையில் கேராவில் உள்ள இந்திய மருத்துவர் சங்க செயலாளர் டாக்டர் சுபி, மோகன்லாலுக்கும், மம்முட்டிக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“நிவாரண முகாம்களில் உள்ள பெரும்பாலான மக்கள் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதை விட மனரீதியாகத்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களது குடும்பத்தில் சிலரை பறிகொடுத்து, சிலர் தங்கள் வீடு மற்றும் உடமைகளை பறிகொடுத்து என மனதளவில் தளர்ந்துள்ளனர். அவர்களுக்கு இப்போது தேவை ஊக்கமும் ஆதரவும் கொடுக்கும் வார்த்தைகள். நீங்கள் இருவரும் நிறைய நிவாரண முகாம்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு வாழக்கையை எதிர்கொள்ளும் விதமாக தைரியம் கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார் டாக்டர் சுபி
