தென்னிந்திய சினிமாவில் 13 வருடங்களாக நடித்து வருபவர் ராய் லட்சுமி. தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு குட்டநாடன் பிளாக் என்ற படத்தில் நடிக்கிறார். மம்முட்டியுடன் இவர் நடிக்கும் ஐந்தாவது படம் இதுவாகும்.
படப்பிடிப்பின் போது மம்முட்டி, ராய் லட்சுமியை வைத்து எடுத்த போட்டோ வைரலாகி உள்ளது. அதில், மாலை நேரத்தில் சூரியன் மறையும் நேரத்தில், அதை லட்சுமி ராய் விழுங்குவது போன்று அந்த போட்டோ உள்ளது.