தொடர் தோல்விகளைச் சந்தித்து சரிவடைந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியை ஊக்கப்படுத்தும் வகையிலும், அடுத்த உலககிண்ணப் போட்டிகளுக்கு தயார் படுத்தும் முயற்சிகளையும் இலங்கை கிரிக்கெட் சபை முன்னெடுத்துள்ளது.
அதன்படி கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தத் தொகை மற்றும் ஊதியத் தொகை போன்றவற்றை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியம் 30 முதல் 50 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அதன் முதற்கட்டப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, வீரர்களின் உடற்தகுதியை கண்காணிக்க சர்வதேச தரத்திலான தொழில்நுட்ப கருவிகளையும் இலங்கை கிரிக்கெட் சபை உபயோகத்திற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.