கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் ஒரு ஆதார் லவ் படத்தில் இடம்பெற்ற மாணிக்ய மலராய பூவி பாடலில் தனது புருவம் உயர்த்தல் மற்றும் கண் சிமிட்டல்களால் புகழ்பெற்றவர் புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர். அந்தப்பாடலுக்குப்பின் அவருக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தாலும், சில சர்ச்சைகளில் சிக்கவும் அவர் தவறவில்லை.
அதேசமயம் இரண்டு தினங்களு முன் அதே படத்தில் இருந்து பரீக் பெண்ணே என்கிற இன்னொரு பாடல் யூடியூப்பில் வெளியானது.. ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக இந்தப்பாடல் 8 மில்லியன் பார்வைகாலை நெருங்கினாலும் சுமார் 6 லட்சம் டிஸ்லைக்குகளை பெற்று வருகிறது. போகப்போக வெறுப்பவர்கள் எண்ணிக்கை கூடும் என்றே தெரிகிறது.
இதை கண்டு அதிர்ந்துபோன படத்தின் இயக்குனர் ஒமர் லுலு, இந்தப்படத்தில் நடித்துள்ள சில ஹீரோயின்களில் பிரியா பிரகாஷும் ஒருவர். மற்ற திறமைசாலிகளும் இதில் இருக்கின்றனர். அதனால் பிரியா வாரியர் மீது உங்களுக்கு வெறுப்பது ஏற்பட்டு இருந்தால் அதற்காக எனது படத்தை தயவுசெய்து கொன்றுவிடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு ஆதார் லவ் படத்திற்கு பளீர் வெளிச்சம் கொடுத்த பிரியா வாரியரே இப்போது இந்தப்படத்திற்கு எதிர்மறை விளம்பரம் கிடைக்கவும் வழிவகுத்துள்ளார் என்பதுதான் இதில் விந்தையான ஒன்று

