பாலிவுட்டில் ராய்லட்சுமி நடித்து பெரிதும் எதிர்பார்த்த ஜூலி 2 படம் தோல்வியை தழுவியது. தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் இந்த படத்தை காரி பாலாஜி இயக்குகிறார்.
திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் ராய்லட்சுமி அதிரடியான போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். அதிரடியான போலீஸ் வேடம் என்பதால், இந்த படத்தில் தனது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்த தயாராகிக்கொண்டிருக்கும் ராய்லட்சுமிக்கு இரண்டு சண்டை காட்சிகளும் உள்ளதாம்