தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான ரஜினியும், கமலும் தற்போது அரசியல் களம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு முன்பு வரை ரஜினியும், கமலும் ஆக்டிவாக இல்லை. அவர் மறைந்ததிலிருந்து கமல் டுவிட்டரில் கருத்து சொல்ல தொடங்கி அதனையே முக்கிய காரணியாக கொண்டு இப்போது அரசியல் கட்சியும் தொடங்கி விட்டார். ரஜினி பேஸ்புக் டுவிட்டரில் ஆர்வம் இல்லாதவர் . அவரும் அரசியலில் குதிக்க இருப்பதால் பேஸ்புக் டுவிட்டருக்கு வந்தார்.
கடந்த வார நிலவரப்படி ரஜினியின் டுவிட்டரையும், கமலின் டுவிட்டரையும் 46 லட்சம் பேர் பின் தொடர்ந்தனர். இந்த சமநிலை ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் நேற்றைய நிலவரப்படி ரஜினி டுவிட்டரை 46.15 லட்சம் பேரும், கமலின் டுவிட்டரை 46.95 லட்சம் பேரும் பின் தொடர்கிறார்கள். பேஸ்புக்கில் நேற்றைய நிலவரப்படி ரஜினியை 1.75 லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். கமலின் பேஸ்புக்கை 35.93 லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். ரஜினி அபூர்வமாகத்தான் பேஸ்புக், டுவிட்டரில் வந்து கருத்துக்களை பதிவிடுகிறார். கமல் தினந்தோறும் தனது கருத்துக்களை பதிவிடுகிறார் அதுவே இந்த வேறுபாட்டுக்கு காரணம் என்கிறார்கள்.