ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் அதிமுக்கியமான ஆல் ரவுண்டர் ஆடவில்லை எனில் இங்கிலாந்து அணி களத்தில் ‘பூனைக்குட்டிகள்’ போல் காட்சியளிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:
நான் பென் ஸ்டோக்ஸின் பெரிய விசிறி. அவரது உத்வேகமும், ஆக்ரோஷமும் ஆஸ்திரேலியாவில் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.
நம்மிடம் இத்தகைய குணங்கள் இல்லாவிடினும் ஆஸ்திரேலியர்கள் நம்மிடத்தில் இதனை ஏற்படுத்தி விடுவார்கள். பென் ஸ்டோக்ஸ் உடல் அளவிலும் மனத்தளவிலும் வலுவான வீரர். எனவே பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய களங்களில் பூனைக்குட்டிகள் போல் காட்சியளிக்கும்.
பென் ஸ்டோக்ஸ் அணிக்குப் பங்களிப்புச் செய்யும் நம்பிக்கை மிக மிக முக்கியமானது, ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல வேண்டுமென்றால் அதற்கு பென் ஸ்டோக்ஸ் தவிர்க்க முடியாத ஒரு வீரர்.
இவ்வாறு கூறினார் மே.இ.தீவுகள் லெஜண்ட் விவ் ரிச்சர்ட்ஸ்.
