5 வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லக்னோவில் நேற்றிரவு நடந்த 42வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள அரியானா ஸ்டீலர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின.
இதில் அரியானா 27-25 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள உத்தரபிரதேச யோத்தா-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உபி முதல் பாதியில் 19-11 என முன்னிலை வகித்தது. .
பின்பாதியில் தமிழ் தலைவாஸ் விறுவிறுப்பாக ஆடி புள்ளிகளை குவித்தது.
முடிவில் 33-33 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது. 6 ஆட்டத்தில் விளையாடி இருக்கும் தமிழ் தலைவாஸ் ஒரு வெற்றி, 3 தோல்வி, 2 டை கண்டுள்ளது.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச யோத்தா- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

