கடவுளின் நகரம் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் மாநிலம் தான் கேரளா. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளமும் கேரளாவையே புரட்டிப்போட்டு விட்டன. மக்களின் இயல்பு வழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை நின்று வெள்ள நீர் வடிய துவங்கியுள்ளது
இந்த நிலையில் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் தங்கள் வீடுகளையும் தாங்கள் வசிக்கும் பகுதிகளையும் மீண்டும் தங்கள் வாழ்விடமாக மாற்றும் பணிகளில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் மோகன்லால் பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நமது மக்கள் சற்றும் மனம் தளராமல் அதை எதிர்கொண்டு சமாளித்ததும், நிவாரண பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவியதும் என்னை மிகவும் நெகிழவைக்கிறது. அதேசமயம் கடவுளின் நகரம் என அனைவரும் புகழ்ந்து பாராட்டும் கேரளாவை, மீண்டும் அதே பழைய பொலிவுடன் நாம் கொண்டு வர நமது முழு சக்தியும் பயன்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார் மோகன்லால்.
