பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பவர் ஸ்டாரும், நடிகை யாஷிகாவும் மறுத்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டும் சில பிரபலங்கள் மறுத்துள்ளனர். சிலருக்கு ஒரே வீட்டில் 100 நாட்கள் அடைந்திருக்க பிடிக்கவில்லை. சிலருக்கு டேட்ஸ் இல்லை.
இந்நிலையில் பிக் பாஸுக்கு நோ சொன்ன நபர் பற்றி தெரிய வந்துள்ளது.
யாஷிகா
கார்த்திக் நரேனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைக்க அவர் மறுத்துவிட்டாராம்.
பவர் ஸ்டார்
நம்ம சேட்டைக்கார பவர் ஸ்டார் சீனிவாசன் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் டிஆர்பி உச்சம் தொடும் என்று நினைத்து அவரை அழைக்க அவரும் இல்ல பாஸ் என்று கூறிவிட்டாராம்.
கஸ்தூரி
ட்விட்டரில் நாட்டு நடப்பு பற்றி பேசி வரும் நடிகை கஸ்தூரியையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பல முறை அழைத்தும் அவர் மறுத்துவிட்டாராம்.
2வது சீசன்
பிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்று ஒரு கலக்கு கலக்க பவர் ஸ்டாரும், யாஷிகாவும் தயாராக உள்ளார்கள். இரண்டாவது சீசன் வருமா என்ற சந்தேகத்தில் உள்ளனர் பார்வையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.