குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த பஹத் பாசில் 2011ல் தான் கதாநாயகன் ரோலில் நடிக்க துவங்கினார். சுமாரான படங்களில் பெயரளவுக்கு நடித்துவந்த அவர் 2012க்கு மேல் 22 பீமேல் கோட்டயம், அன்னயும் ரசூலும் ஆகிய படங்களில் தொடர்ந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி திறமையான நடிகர் என பெயர்பெற்றார். அப்படி மாறியதற்கான காரணத்தை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார் பஹத் பாசில்.
தற்போது தமிழில் ஆரண்ய காண்டம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வருகிறார் பஹத் பாசில். இந்தப்படத்தில் தியாகராஜனுடன் பணியாற்றிய அனுபவமே ரொம்ப வித்தியாசமாக இருந்ததாக கூறியுள்ள பஹத் பாசில், தான் நடிக்க வந்த புதிதில் ஆரண்ய காண்டம் படம் பார்த்த பின் தான், ஒரு நடிகனாக எப்படி மாறவேண்டும் என தன்னம்பிக்கை கிடைத்ததாக பெருமையுடன் கூறியுள்ளார்.
