நயன்தாராவின் அறம் படம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு நயன்தாராவின் நடிப்பை பாராட்டதவர்களே இல்லை எனலாம்.
விமர்சகர்கள் அறம் படத்திற்கு நல்ல ரேட்டிங் கொடுத்துள்ளனர். படம் பற்றி அனைவரும் நல்லவிதமாக பேசுவது நயன்தாராவை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
அறம் படம் தியேட்டர்களில் ரிலீஸான வேகத்தில் நெட்டில் கசிந்துள்ளது. அதுவும் பல்வேறு குவாலிட்டி பிரிண்ட்டுகளில் இன்டர்நெட்டில் படம் வெளியாகியுள்ளது.
புதுப்படங்களை இப்படி இணையதளத்தில்ல வெளியிடுவதை தடுக்க தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும் ஏதேதோ செய்கிறார். ஆனால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
சென்னையில் அறம் படம் ஓடும் காசி தியேட்டர் உள்ளிட்ட சில தியேட்டர்களுக்கு நயன்தாரா மதிவதனி கெட்டப்பில் சென்று ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்தார்.

