பட்டிகுல் மீட்டர் சலு படத்தின் தயாரிப்பாளர்கள், அப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இப்படம் 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 31 ம் அன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.
இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என செய்திகள் பரவி வந்தது. ஆனால் அதற்கு முன்பு, ஆகஸ்ட் 31 அன்றே ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தை இயக்கிய ஸ்ரீ நாராயண் சிங் தான் இப்படத்தையும் இயக்குகிறார்.
ஷாகித் கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை கிர்அர்ஜ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்கள் உத்தரகாண்டில் விரைவில் துவங்க உள்ளது.

