சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்ட கண்ணிவெடிகளை பங்களாதேஷுடனான அதன் எல்லையில் மியன்மார் இராணுவம் புதைத்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) உறுதிப்படுத்துள்ளது.
இதனால் கடந்த வாரத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
நேரடியாகக் கண்டவர்களின் நேர்காணல் மற்றும் ஆயுத வல்லுநர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சர்வதேச மன்னிப்புச் சபை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ராக்கெய்ன் மாநிலத்தின் வடமேற்கு எல்லைப் பகுதியிலேயே இவ்வாறு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள அதேவேளை, கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்ற இராணுவ அடக்குமுறைகளால் குறித்த பகுதியின் ஊடகாவே சுமார் 270,000 பேர் தப்பிச்சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு செய்துள்ளது.
.
“ராக்கெய்ன் மாநிலத்தில் நிலவும் கொடூரமான நிலைமையில் இது மற்றுமொரு கீழ்த்தரமான விடயம். மியன்மார் இராணுவத்தின் கண்மூடித்தனமான, அலட்சியமான ஆயுத பயன்பாடு சாதாரண மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.” என மியன்மார் – பங்களாதேஷ் எல்லைக்கு அருகாமையில் கடமையில் உள்ள சர்வதேச மணிப்புச் சபையின் நெருக்கடிகள் தொடர்பில் பதிலளிக்கும் பணிப்பாளர் டிரானா ஹஸன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.