Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

நீரிழிவு கால்புண்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?

July 31, 2017
in Life
0

காலில் புண்கள் ஏற்படுவது மற்ற எவர்களையும் விட நீரிழிவாளர்களில் அதிகம். அத்துடன் அவர்களுக்கு மிகவும் ஆபத்தானதும் கூட.

நீரிழிவினால் காலுக்கான

*குருதி ஓட்டம் குறைவதனாலேயே அவர்களுக்கு காலில் புண்கள் ஏற்படுகி்ன்றன.

*அதே இரத்த ஓட்டக் குறைபாட்டினால் அவை குணமடைவதும் சிரமம். விரல்களையும் கால்களையும் அகற்ற வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படுகிறது.

*மற்றொரு காரணம் நரம்புகளின் பாதிப்பால் நீரிவாளர்களுக்கு கால்களில் உணர்ச்சி குறைவு என்பதால் காயம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.

*உணர்வு குறைவு என்பதால் அவை பெருகும்வரை தெரிவதும் இல்லை.

*வெறும் காலுடன் கோயில் கும்பிடப் போய் காலில் ஏதாவது குத்திக் காயங்கள் தேடிக் கொண்ட பலரைப் பார்த்திருக்கிறேன்.கால்களை இழந்தவர்களும் உண்டு.

காலில் புண்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை The American Podiatric Medical Association வழங்கியிருக்கிறது.

*உங்கள் மருத்துவரை ஒழுங்கான காலக்கிரமத்தில் சந்தியுங்கள்

*புகைப்பதையும், மது அருந்துவதையும் தவிருங்கள்

*குருதியில் கொலஸ்டரோல் மற்றும் சீனியின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருத்துவரின் ஆலோசனைகளை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள்.

*உங்கள் காலுக்கு ஏற்ற காலணிகளையும் சொக்ஸ்களையும் அணியுங்கள்

*காலணிகள் அணியாது வீட்டு முற்றம், வீதி, காணி எங்கும் காலெடுத்து வைக்காதீர்கள்

*தினமும் உங்கள் பாதங்களை ஒழுங்காக கவனியுங்கள்.

*உரசல்கள், காயங்கள், நிறமாற்றங்கள், வலி, போன்ற எதையும் உடனடியாக மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.

*நகம் வெட்டும்போது மிகுந்த அவதானம் தேவை. குளித்த பின் நகங்கள் மிருதுவாக இருக்கும் நேரத்தில் வெட்ட வேண்டும். நகத்தின் ஓரங்களை வளைத்து வெட்டாது, நேராகவும், அருகில் உள்ள சருமத்தைவெட்டாதபடியும் அவதானம் வேண்டும்.

Previous Post

ஜனாதிபதி கெபிதிகொல்லாவைக்கு திடீர் விஜயம்

Next Post

புருவம் , முகம், பற்கள்,உதடு அழகு பெற!!

Next Post
புருவம் , முகம், பற்கள்,உதடு அழகு பெற!!

புருவம் , முகம், பற்கள்,உதடு அழகு பெற!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures