Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நிவின்பாலி படத்தில் விஜய் சேதுபதி..!

November 16, 2017
in Cinema
0
நிவின்பாலி படத்தில் விஜய் சேதுபதி..!

விஜய் உடன் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் படத்தின் ஷூட்டிங் ஜனவரியில் துவங்குகிறது. ‘சோலோ’, ‘அங்கமாலி டைரிஸ்’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரனை கேமராமேனாக ஃபிக்ஸ் செய்துள்ளார்கள். விஜய் படங்களில் பணியாற்றாத ஒருவரை இசையமைப்பாளராக ஃபிக்ஸ் பண்ணவேண்டும் என்பது டீமின் விருப்பம். அதனால் இசையமைப்பாளர் தேடல் தொடர்கிறது. இதில் விஜய்யின் ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்கள் பலர் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் இந்த ரேஸிலேயே இல்லாத ‘தோனி’ இந்திப் படத்தில் நடித்த கியாரா அத்வானி முந்துவார் என தெரிகிறது.

வெளிப்புறமோ, சென்னையோ படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் ஓய்வு நேரத்தில் சிவகார்த்திகேயனின் ஒரே பொழுதுபோக்கு கிரிக்கெட். அதுவும் தன் திருச்சி கல்லூரி நண்பர்கள், தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தபோது உடன் இருந்த நண்பர்களுடன் மட்டையும் பந்துமாக கிளம்பிவிடுவார். இதற்காகவே சென்னை புறநகரில் மாயாஜால் திரையரங்கு அருகே உள்ள ஒரு மைதானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்கள். சமயத்தில் இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், அட்லி, நெல்சன் என ஸ்பெஷல் ஆல்ரவுண்டர்களையும் அங்கு காணலாம்.

எல்லோர் வீட்டு பீரோக்களிலும் பழைய பட்டுப் புடவைகள் இருக்கும். அவற்றை தூக்கிப்போட நம் வீட்டு பெண்களுக்கு மனம் வராது. கேட்டால், ‘இது நிச்சயத்துக்கு எடுத்தது, அது கல்யாணத்துக்கு எடுத்தது’ என்று பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவார்கள். இப்படி தன் வீட்டில் இருந்த பட்டுப்புடவைகைள்கொண்டு சென்னை போட்கிளப் சாலையில், தான் புதிதாக கட்டியிருக்கும் வீட்டில் புதிய வடிவமைப்பில் ஒரு கூரையை அமைத்து இருக்கிறார் நடிகர் சித்தார்த். அனைவரையும் ஈர்க்கும் வகையில் அது அழகான கலைவண்ணத்தில் மிளிர்கிறது.

கல்பனா ஹவுஸ் சுஜாதா விஜயகுமார், சின்னத்திரை ஏரியாவில் பிரபலம். சீரியல் தயாரிப்பாளர். இவர் தற்போது சினிமா தயாரிப்பிலும் இறங்குகிறார். ஹீரோ ஜெயம் ரவி. இவர் ஏற்கெனவே கமிட் ஆகியிருந்த ‘சங்கமித்ரா’ தள்ளிப்போனதால் அந்த கால்ஷீட்டை இவர்களுக்கு தந்திருக்கிறார். இந்த சுஜாதா வேறுயாருமல்ல, ஜெயம் ரவியின் மாமியார்தான். ஹீரோயின் உள்பட மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களின் தேர்வு நடந்து வருகிறது.

பிரபுதேவா இயக்கத்தை தள்ளிவைத்துவிட்டு முழுநேர நடிகராகிவிட்டார். தற்போது அவர் ‘யங் மங் ஷங்’, ‘மெர்க்குரி’, ‘குலேபகாவலி’ ஆகிய தமிழ்ப் படங்களிலும், ‘காமோஷி’ என்ற இந்திப்படத்திலும் நடிக்கிறார். இவற்றைத்தவிர, ‘தூத்துக்குடி’ என்ற படத்தில் நடித்த நடன இயக்குநர் ஹரிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சமந்தா திருமணம் முடிந்ததும் குட்டி ஹனிமூன் ட்ரிப்பாக கணவர் நாகசைதன்யாவுடன் லண்டன் சென்று திரும்பி இருக்கிறார். அவர் ராம் சரணுடன் நடிக்கும் ‘ரங்காஸ்தலம்’ என்ற தெலுங்கு படத்தை முடிக்கிறார். அடுத்து சிவகார்த்திகேயன்-பொன்ராம் படம், ‘இரும்புத்திரை’, ‘சூப்பர் டீலக்ஸ்’ படங்களை முடிக்கிறார். இந்த நிலையில் திருமணத்துக்குப்பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்பதை உறுதி செய்யும் வகையில் கன்னடத்தில் ஹிட் அடித்த ‘யூ-டர்ன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது, ஹீரோயினை மையப்படுத்திய மிஸ்டரி த்ரில்லர் சினிமா.

‘காயங்குளம் கொச்சுண்ணி’. இது நிவின் பாலி நடித்துக்கொண்டு இருக்கும் மலையாளப்படம். சமீபத்தில் மலையாளத்தில் வந்த படங்களிலேயே பெரிய படமாக இது இருக்கும் என்கிறார்கள். ஆனால் விஷயம் அதுவல்ல, அதில் ஒரு முக்கியமான கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்பதுதான் சிறப்பு செய்தி.

Previous Post

வடிவேலுவைக் காப்பாற்றுவாரா விஷால்?

Next Post

டிசம்பரில் மாவட்ட வாரியாக கமல் ஹாஸன் சுற்றுப் பயணம்!

Next Post
டிசம்பரில் மாவட்ட வாரியாக கமல் ஹாஸன் சுற்றுப் பயணம்!

டிசம்பரில் மாவட்ட வாரியாக கமல் ஹாஸன் சுற்றுப் பயணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures