மலையாளத்தில் முப்பது வருடங்களுக்கு முன் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருந்தவர் சீனியர் நடிகரான மது. தமிழில் தர்மதுரை படத்தில் ரஜினியின் அப்பாவாக நடித்தது இவர்தான்.. முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 2000க்கு பின் படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார்.
தற்போது பிரியதர்ஷன் டைரக்சனில் உருவாகவுள்ள, மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் மது. இந்தநிலையில் இன்று இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மோகன்லால் அவருக்கு கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

