மங்காத்தா, ஜில்லா உள்பட சில படங்களில் நடித்தவர் மகத். பிக்பாஸ்-2 நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். மேலும் கடந்த ஆண்டு இவரது காதலி பிராய்ச்சி தேசாய்க்கும், இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று மகத்-பிராய்ச்சி தேசாய் திருமணம் நடைபெற்றது. அப்போது நடிகர் சிம்பு, ஹரீஷ் கல்யாண், நடிகை பிந்துமாதவி உள்பட பலர் அவரை நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர். அந்த புகைப் படங்களை இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் மகத்.