விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று புதிய கட்டி டத்தை கட்டி வந்தனர். அதையடுத்து அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. ஆனால் அந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து பல மாதங்கள் கழித்து சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்பில் மீண்டும் நடிகர் சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக விஷால் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விஷால் அணியைச் சேர்ந்த நடிகர் கருணாஸ் மீடியாக்களுக்கு பேட்டி அளித்தபோது, சட்டரீதியான எங்களின் போராட்டம் தொடரும். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பு கிறோம். நடிகர் சங்கம் என்பது தனிநபர் சொத்தல்ல, அதற்கு தனிநபர் யாரும் உரிமை கொண்டாட முடியாது. மேலும் தற்போது சங்கமே முடங்கிப்போய் உள்ளது. மறு தேர்தல் நடத்துவதற்குகூட சங்கத்தில் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார் கருணாஸ்.