ஒரு படம் ஹிட் அடித்தால் போதும் அதே போன்ற கதைகளில் நடிக்க திட்டமிடுவார்கள் நமது ஹீரோ, ஹீரோயின்கள். சமீபத்தில் மெர்சல், அறம் இரண்டு படங்களும் ஹிட் அடித்ததோடு அவற்றில் நடித்த விஜய், நயன் தாரா இருவருக்கும் நல்ல இமேஜை வழங்கியிருக்கிறது. ஹாரர் சீஸன் போய் த்ரில்லர் சீஸனுக்குள் புகுந்திருந்தது தமிழ் சினிமா. லீட் ரோலில் நடிக்கும் ஹீரோயின்களும் ஹாரர் அல்லது த்ரில்லர் படங்களாக நடித்து வந்தார்கள். இப்போது அவற்றில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு மெஸேஜ் சொல்லும் கதைகளாக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்கள்.
முக்கியமாக த்ரிஷா, அமலாபால் போன்ற ஹீரோயின்களும், முன்னணி ஹீரோக்களும் இதுபோன்ற கதைகளாக கேட்க தொடங்கியுள்ளார்கள்.