ரஜினியின் 168வது படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் முன்னதாக, மிஸ் இந்தியா என்ற தெலுங்கு படத்திலும், பென்குயின் என்ற தமிழ்ப்படத்திலும் கதையின் நாயகியாக நடித்து வந்தார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்துவிட்ட நிலையில், மிஸ் இந்தியா படம் மார்ச் 6-ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு நேற்று முதல் அப்படத்தின் டப்பிங் தொடங்கியுள்ளது. முதல் நாளே தனக்கான டப்பிங்கை தெலுங்கில் பதிவு செய்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ளது.