சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிய கார்த்திக், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தார். அதன்பிறகு அரசியலை விட்டு விலகி சினிமாவில் நடித்து வந்த அவர், தற்போது மீண்டும் அரசியலில் தீவிரமாக இறங்க உள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தீவிர அரசியலில் இறங்க உள்ளேன். இன்னும் 3 நாட்களுக்கு பின் கட்சியின் பெயரில் சிறிய மாற்றமும், நிர்வாகிகள் மாற்றமும் செய்து மதுரையில் அறிவிக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.
விஜயகாந்த் 13 ஆண்டுகளாக பயணித்து வரும் நிலையில், தற்போது ரஜினி, கமல், ஆகியோரும் அரசியலில் பிரவேசித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது கார்த்திக்கும் அந்த பட்டியலில் இணைகிறார்.