திருமணம் எனும் சொல்லை கேட்டாலே நடிகை த்ரிஷா வெறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் 15 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த 96 திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை, பரமபத விளையாட்டு, சுகர், 1818 என வரிசையாக படங்கள் வைத்துள்ளார். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரது கால்ஷீட் செம பிஸி.
ஆனால் த்ரிஷாவின் அம்மாவுக்கு, தன்னுடைய மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்பது எண்ணம். இதனால் த்ரிஷாவிடம் இதுகுறித்து அவ்வப்போது பேசி வருகிறார். ஆனால் த்ரிஷாவோ திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே வெறுப்பாகி காதை பொத்திக் கொள்கிறாராம். வருண் மணியன், ரானா டகுபடி என ஏற்கனவே ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், திருமணத்தை வெறுக்க வைத்துவிட்டதாம். திருமணம் செய்து கொள்ளும் யோசனையே இல்லை என தனது தாயிடம் கூறி வருகிறாராம் த்ரிஷா. இதனால் அவரது அம்மா வருத்தத்தில் உள்ளாதாக தகவல்.

