பாகுபலி நாயகன் பிரபாஸ், தற்போது சாஹோ படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். பாகுபலி-2 படம் வெளியானபோது அவரும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை அவர்கள் இருவருமே மறுத்தனர்.
இருப்பினும் மீடியாக்களில் பிரபாஸின் திருமணம் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், அனுஷ்காவைத் தொடர்ந்து நாக பாபு என்பவரின் மகளான மாரி நிகாரிகா கோனிடேலா என்ற 24 வயது பெண்ணை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
சினிமாவில் இன்னும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பதில் தான் பிரபாஸின் முழு எண்ணமும் உள்ளது. அதனால் இப்போதைக்கு அவருக்கு திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லை என பிரபாஸ் தரப்பு கூறியிருக்கிறது.