மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான ‘ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்ய லட்சுமி, அந்தப்படத்தை தொடர்ந்து ‘மாயநதி’ படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் வணிகரீதியாக வெற்றி பெறவே அடுத்தடுத்து இவரை தேடி வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.
தற்போது பஹத் பாசில் ஜோடியாக வரதன் என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்ட ஐஸ்வர்ய லட்சுமி, காளிதாஸ் ஜெயராம் மற்றும் ஆசிப் அலியுடன் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் சுந்தர் சி படம் மூலமாக தமிழிலும் அறிமுகமாகிறார் ஐஸ்வர்ய லட்சுமி. விஷால், தமன்னா நடிக்கும் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக இவர் நடிக்க உள்ளார்.