விஜய் நடித்த ‘மெர்சல்’ தமிழில் செமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் உலகம் முழுவதும் ரூ. 20௦ கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.
தமிழில் ‘மெர்சல்’ படம் ரிலீஸுக்கு முன்பு சிக்கல்களைச் சந்தித்தது போலவே தெலுங்கு மெர்சலான ‘அதிரிந்தி’ படமும் சென்சார் பிரச்னையால் ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்த நிலையில் மெர்சல் படத்தின் தெலுங்கு வெர்சன் ‘அதிரிந்தி’ வரும் நவம்பர் 9-ம் தேதி ரிலீஸாக இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. தெலுங்கு ரசிகர்களும் மெர்சலாகக் கொண்டாடக் காத்திருக்கிறார்கள்.
மெர்சல் வெறித்தன வசூல்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளைக் கடந்து தீபாவளிக்கு வெளியானது ‘மெர்சல்’ திரைப்படம். ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்து ஓடிக்கொண்டிருக்கிறது ‘மெர்சல்’. ஆனால், ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னதாகத்தான் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனால், படம் தீபாவளியன்று வெளிவருமா வராதா என்ற பரபரப்பு இருந்தது.
படம் வெளிவந்த பின்னரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் மிகப் பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. விஜய்யின் மெர்சல் படம் சர்ச்சைகளுக்கு நடுவே ரூ. 200 கோடி வசூலித்துள்ளது. ‘மெர்சல்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் படத்திற்கு விலையில்லா விளம்பரம் செய்து பா.ஜ.க-வினர் படத்தை பெரிய வெற்றிபெறச் செய்துள்ளனர்.
மெர்சல் வசன சர்ச்சை
மெர்சல் வசன சர்ச்சை
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய வசனங்கள் பா.ஜ.க-வினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் படத்தைத் தொடர்ந்து திரையிட முடியும் என எச்சரிக்கப்பட்டது. ஆனால், இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பொதுமக்களும், கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சி என பா.ஜ.க-வினருக்கு கண்டனம் தெரிவித்தனர்.