நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், தமிழில் அறிமுகமான ‘ஒருபக்க கதை’ படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இன்னும், கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தநிலையில் மலையாளத்தில் வெளியான பூமரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் காளிதாஸ்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்வில் நடிகர் ஜெயராம், பிரபல தயாரிப்பாளரும் மோகன்லாலின் நண்பருமான ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.. குறுகியகால தயாரிப்பாக உருவாகும் இந்தப்படத்திற்கு மிஸ்டர் ரவுடி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.