2013-ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்த படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் பல தடைகள் தாண்டி படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகின.
இதன் இரண்டாம் பாகம் ஏற்கனவே பாதி எடுக்கப்பட்ட நிலையில், ஆஸ்கர் ரவிச்சந்திரன் உடனான பிரச்னையால் விஸ்வரூபம் 2 கிடப்பில் போடப்பட்டது. பின்னர் அந்த பிரச்னைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு படமும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது.
முதல்பாகத்தில் கமலுடன் நடித்த பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர்கபூர் உள்பட பலரும் இரண்டாம் பாகத்தில் தொடருகின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படம் சென்சாருக்கும் சென்று வந்துவிட்டது. இதையடுத்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தினத்தில் வெளியிட கமல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.