மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’ வருகிற 22-ஆம் தேதி வெளியாகிறது. ‘வேலைக்காரன்’ ரிலீசாவதற்கு முன்பே பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
தென்காசியை சுற்றி இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏறக்குறைய 70 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17-ஆம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு ‘சீமத்துரை’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை பொன்ராம் மறுத்துள்ளார். படத்திற்கான தலைப்பு இன்னும் முடிவாகவில்லை, விரைவில் அறிவிப்போம். படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் கதையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
சீமத்துரை என்ற பெயரில் ஏற்கனவே நடிகை விஜி சந்திரசேகர் முதன்மை ரோலில் நடிக்க ஒரு படம் தயாராகி வருகிறது. சந்தோஷ் தியாகராஜன் என்பவர் இயக்கி உள்ளார்.