Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

‘சிறைக்குச் செல்லும் முன் தினகரனிடம் சசிகலா சொன்ன கடைசி வார்த்தை!’

October 12, 2017
in World
0
‘சிறைக்குச் செல்லும் முன் தினகரனிடம் சசிகலா சொன்ன கடைசி வார்த்தை!’

சிறைக்குச் செல்லும் முன் தினகரனிடம் சசிகலா, உணர்ச்சிபொங்க சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறார். குடும்ப விவகாரங்களிலும் அரசியல் தலையீடுகளிலும் ‘அமைதியாக இரு’ என்று சொல்லியதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதனால் தினகரன் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராசனைச் சந்திக்க பரோலில் சென்னை வந்தார். ஐந்து நாள்கள் பரோல் முடிந்து, இன்று சென்னையிலிருந்து பெங்களூரு செல்கிறார். சென்னையில், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்த சசிகலா, நடராசன் அனுமதிக்கப்பட்டுள்ள பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனைக்குச் சென்று, அவரிடம் நலம் விசாரித்தார். கடும் நிபந்தனைகளின் பேரில் பரோல் வழங்கப்பட்டதால், சசிகலா ஐந்து நாள்கள் பரோலை அமைதியாகவே நிறைவுசெய்துள்ளார்.
உறவினர்களைத் தவிர வேறு யாரையும் சசிகலா சந்திக்கவில்லை. வீட்டுக்குள் தனியறையில் முடங்கிய சசிகலா, குடும்ப விவகாரங்களில் நீண்டகாலமாக நிலவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வழிவகைசெய்துள்ளார். குறிப்பாக திவாகரன், தினகரன் இடையே நீறுபூத்த நெருப்பாக இருந்துவரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, இரு தரப்பினரிடமும் பேசினார். ஆனால், சசிகலா எதிர்பார்த்த முடிவுகள் எடுக்கப்படவில்லை. இது, சசிகலாவுக்குக் கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவுக்கும் தினகரனுக்கும் நடந்த உரையாடல் விவரம், ஜெயானந்த் மூலம் அவருடைய தந்தை திவாகரனுக்கு லைவ் ரிப்போர்ட்டாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் திவாகரன், சில ஆலோசனைகளை ஜெயானந்துக்குக் கொடுத்துள்ளார். இதற்கிடையில், இளவரசியின் மகன் விவேக்கிற்கும் ஜெயானந்த் ஆதரவாளர்களுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பஞ்சாயத்து சசிகலாவுக்குத் தெரியவந்ததும், இரு தரப்பினரையும் அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் சசிகலா. குடும்ப விவகாரங்களிலேயே அதிக நேரத்தைச் செலவிட்ட சசிகலா, அரசியல்குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கவில்லை என்று உள்விவர வட்டாரங்கள் சொல்கின்றன. சசிகலாவின் வருகையால், அ.தி.மு.க-வில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், எதுவுமே நடக்காததால், ஒட்டுமொத்த ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், “பரோலில் சசிகலா வெளியில் வருவதால், அ.தி.மு.க-வில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இது, எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா குடும்பத்திலுள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்திய சசிகலா, அ.தி.மு.க நிலவரங்கள் குறித்து எதுவும் விவாதிக்கவில்லை. இதனால், அவரை நம்பியிருந்த நாங்கள் நிற்கதியாக நிற்கிறோம். ஏற்கெனவே, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் தரப்பினரால் நாங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட, தினகரன் ஆதரவாளரான பூந்தமல்லி எம்.எல்.ஏ வீட்டைச் சூறையாடியவர்கள், ஏழுமலையைப் பகிரங்கமாகத் தாக்கியுள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேநிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. சசிகலா வந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று தினகரன் தரப்பிலிருந்து எங்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால், பரோலில் வந்த சசிகலா, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாளுக்கு நாள் சசிகலா, தினகரனை ஆதரித்தவர்கள், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிகளுக்குத் தாவிவருகின்றனர். இதனால், சசிகலா அணி பலவீனமடைந்துவருகிறது” என்றனர்.

சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். ஏற்கெனவே சசிகலா, தினகரனைக் கடுமையாக விமர்சித்தவர்கள், சசிகலாவால் சிக்கல் வருமோ என்ற பீதியிலிருந்தனர். ஆனால், சசிகலாவிடமிருந்து எந்தவித பதிலடியும் இல்லாததால், உற்சாகமடைந்துள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார், சில நாள்கள் இடைவெளிக்குப்பிறகு தினகரன்மீது நேற்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது, தினகரனை வம்புக்கு இழுக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்யும் தந்திரமாகவே கருதப்படுகிறது. முன்பெல்லாம் பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் விமர்சித்தால் அன்றைய தினமே பதிலடி கொடுப்பார் தினகரன். தற்போது, அவரது செயல்பாட்டில் சில மாற்றங்கள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர். விமர்சனங்களுக்கு, பெயரளவுக்கு மட்டுமே தினகரன் பதிலளிக்கிறார். அவரது நடவடிக்கைளை உற்றுநோக்கிய ஆதரவாளர்களில் பலர் அணிமாறும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சசிகலா, சென்னையில் தங்கியிருந்ததால், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தேனி, ஊட்டி என்றே முகாமிட்டிருந்தார். ஆனால், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்தார். சசிகலா, பெங்களூரு புறப்படுவதற்கு முன்பே, பன்னீர்செல்வம் டெல்லிக்குப் புறப்பட்டுவிட்டார். சசிகலாவின் நிழல்கூட தன்மீது படக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகச் சொல்கின்றனர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியினர் அன்றாட அலுவல்களை வழக்கம்போல மேற்கொண்டனர். அவ்வப்போது, சசிகலாவின் மூவ்மென்ட்களை உளவுத்துறைமூலம் எடப்பாடி பழனிசாமி அணியினர் தெரிந்துகொண்டனர். உளவுத்துறை சார்பில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், அரசுக்கு எதிராக எந்தவித முயற்சிகளையும் சசிகலா மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால், எடப்பாடி பழனிசாமி அணியினர் உத்வேகத்துடன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு பிரச்னை, அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதால், அதில் அதிக கவனம் செலுத்துமாறு அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Previous Post

கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வீடுகளுக்கு அதிரவைக்கும் அபராதம்!

Next Post

இதெல்லாம் நடந்தால், இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும்!

Next Post
இதெல்லாம் நடந்தால், இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும்!

இதெல்லாம் நடந்தால், இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures