சிரிய எல்லையில் ஐஎஸ்ஸுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈராக் பாதுகாப்புப் படையினர் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து ஈராக் ராணுவத்தினர் தரப்பில், “சிரிய எல்லையில் அமைந்துள்ள பாலைவன பகுதிகளில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளோம். ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒவ்வொரு பகுதியாக நாங்கள் முன்னேறி வந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
ஈராக்க்கில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பாலான பகுதிகளை அமெரிக்கா உதவியுடன் ஈராக் கைப்பற்றிவிட்டது, எனினும் சிரியா -ஈராக் எல்லையோரப் பகுதிகளில் அமைந்துள்ள அனா, ராவா ஆகிய பகுதிகள் இன்னும் ஐஏஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது