சிரஞ்சீவி நடிக்கும் சைரா படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வருவதால், தமிழ் மற்றும் இந்திக்கு பிரபலமான நடிகர்கள் வேண்டும் என்கிறபோதுதான் அமிதாப்பச்சனை முதலில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அவருக்கு இந்த படத்தில் சிரஞ்சீவியின் அப்பா வேடம் என்று கூறப்படுகிறது.
மேலும், தமிழ் சினிமாவைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகரும் வேண்டும் என்கிறபோதுதான் பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டபோது விக்ரம் வேதா படத்தில் நடித்த விஜய்சேதுபதியை ஓகே பண்ணியிருக்கிறார்கள். அந்த படத்தில் அவர் நெகடீவ் வேடத்தில் நடித்திருந்ததே இதற்கு காரணமாம். அந்தவகையில், சைராவில் விஜய்சேதுபதிக்கு நெகடீவ் கலந்த ஒரு வெயிட்டான வேடம் என்று கூறப்படுகிறது.
அதோடு, சிரஞ்சீவியின் இந்த சைரா தான் விஜய்சேதுபதிக்கு நேரடி தெலுங்கு படம் என்றபோதும், அவர் தமிழில் நடித்து வெளியான நானும் ரவுடிதான் படம் முன்பே தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதனால் அவர் ஏற்கனவே தெலுங்கு ரசிகர்களுக்கு பரிட்சயமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
