மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவர் ஜாமீன் கேட்டுள்ளநிலையில் இந்த விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான 1000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் ரேஸ்-3 திரைப் படத்தில் நடித்து வருகிறார் சல்மான்கான்.
இதனையடுத்து தொடர்ந்து தபாங்-3, பாரத் மற்றும் கிக் – 2 ஆகிய படங்களிலும் அவர் நடிக்கவுள்ளார்.
இவையில்லாமல் சோனி டிவியில் சல்மான்கான் நடத்தும் Dus Ka Dum எனும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சில விளம்பர ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு இருக்கிறாராம் சல்மான்கான்.