காமெடி நடிகர் சதீஷ், நடிகை கோவை சரளாவை கிண்டல் செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பர் சதீஷ். பெரும்பாலான படங்களில் ஹீரோவின் நண்பராக நடித்து, தனது ஒன்லைன் கவுண்டர் டயலாக்குகளால் கலக்கி வருகிறார்.
படப்பிடிப்பு தளங்களில் இடைவேளையின் போது ஏதாவது வீடியோ எடுத்து அதை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது அவரது வழக்கம். அதுபோல் அவர் பதிவிடும் பல வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
அப்படி தற்போது அவர் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் புல்லட் வண்டி மீது ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரது க்ளோசப்பில் இருந்து அப்படியே வெளியே வந்து, இந்த நபரை பார்த்தால் சீனாவில் இருந்து வந்தவர் போல் இல்லை என கோவை சரளாவிடம் கேட்கிறார். அதற்கு அவர் ஆமாம் என்கிறார். உடனே சதீஷ், “ஜப்பான்ல இருந்து வந்தவுங்க ஆமாங்குறாங்க”, என கலாய்க்கிறார். இதனால் கோவை சரளா கடுப்பாகிறார்

