காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து 626.2 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். ஹீனா சித்து கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜிது ராயுடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதே பிரிவில் மற்ற இந்திய வீரர்களான ககன் நரங்க் 4-வது இடத்தையும், ரவி குமார் 5-வது இடத்தையும் பிடித்தனர். முன்னதாக நடைபெற்ற தகுதி சுற்றில் ககன் நரங்க் 626.2 புள்ளிகள் குவித்து புதிய சாதனை படைத்திருந்தார். ஆனால் இறுதி சுற்றில் பதக்கம் கைப்பற்ற முடியாமல் ஏமாற்றம் அளித்தார்.