பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக கவினை சேரன் பாராட்டியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. எப்படியாவது நேரடியாக பைனஸ்க்கு போய்விட வேண்டும் என போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் அனைவருக்கும் வினோதமான ஒரு போட்டி வைக்கப்பட்டது. இடதுகாலில் தராசை சமமாக பிடித்துக்கொண்டு, வலது பக்கம் ஒவ்வொரு பஸ்சர் ஒலிக்கும் ஒரு மரக்கட்டையை நிறுத்த வேண்டும் என்பதே அது. யார் அதிக நேரம் தாக்குப்பிடிக்கிறார்களோ அவர்களே இந்த போட்டியின் வெற்றியாளர்.
இந்த டாஸ்க்கில் சிறிது நேரம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சேரன் வெளியேறிவிட்டார். ஷெரின், சாண்டி, தர்ஷன் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, லாஸ்லியா, முகென், கவின் இடையே போட்டி வலுத்தது. இவர்கள் மூவரில் லாஸ்லியா முதலாவதாக வெளியேறினார்.
இதையடுத்து முகென் மற்றும் கவின் இடையே கடும் போட்டி நிலவியது. கவின் 26 நிமிடங்கள் 34 நொடிகள் தராசை சமமாக வைத்திருந்தார். முகென் 27 நிமிடங்கள் தராசை சமமாக வைத்து போட்டியில் வெற்றி பெற்றார்.
இதுநாள் வரை கவின் எந்த டாஸ்க்கிலும் ஒழுங்காக விளையாடியது இல்லை. ஆனால் நேற்றைய தினம் அவர் சிறப்பாக விளையாடியதால் அனைவரும் அவரை பாராட்டினர். இதில் ஹைலைட் என்னவென்றால் சேரன் அவரை பாராட்டியது தான். டாஸ்க் முடிந்த பிறகு கவினை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அவரது கால்களை சேரன் அமுக்கிவிட்டார்.
பொதுவாக பிக்பாஸ் வீட்டில் சேரனுக்கும் கவினுக்கும் தான் ஏழாம் பொறுத்தமாக இருக்கும். ஆனால் நேற்று கவினை சேரன் பாராட்டியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
															
