நடிகர் ஜெயராமின் நடிப்பில் அவரது புதியதொரு முகத்தை காட்டும் விதமாக மலையாளத்தில் உருவாகி வரும் படம் தான் பஞ்சவர்ண தாதா. இதில் ஜெயராம் பறவைகளை விற்பனை செய்யும் கடை நடத்துபவராக நடித்துள்ளார். அதிலும் வித்தியாசமாக, மொட்டைத்தலை கெட்டப்பில் நடித்திருக்கிறார்.
தற்போது இந்தப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள்.. இதில் ஜெயராம் ஒட்டக சவாரி செய்கிறார்.. கழுதைகளை குளிப்பாட்டி விடுகிறார்.. இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களுடன் உருவாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கேரளாவில் டிவி சேனல் தொகுப்பாளர்களில் ரொம்பவே பாபுலரான ரமேஷ் பிஷரோடி என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் ஜெயராமுடன் குஞ்சாக்கோ போபன் இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார்.