‘அறம்’ படத்தில் தன்னுடைய எதார்த்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்திருப்பவர் சுனு லட்சுமி. ஒரு தாயின் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. திரையில் முதிர்ச்சியான தாயாக ரசிகர்களை நிமிரச் செய்யும் இவர், நிஜத்தில் மார்டன் குயின். சல்யூட் போட வைக்கும் அவருடைய நடிப்பு அனுபவங்களை பகிரச் சொல்லி கேட்டோம்.
சுனு லட்சுமி பற்றி..?
என்னுடைய சொந்த ஊர் எர்ணாகுளம். அப்பா பிசினஸ் மேன். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். எனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. நான் டிகிரி முடிச்சிட்டு, இப்போ சினிமால பிஸியா நடிச்சிட்டு இருக்கேன்.
கேரளா டூ தமிழ் சினிமா எப்படி?
நான் சின்ன வயசுல இருந்தே டான்சர். நிறைய ஸ்டேஜ் புரோகிராம் பண்ணிருக்கேன். டான்ஸ் தவிர எனக்கு எதுவும் தெரியாதுனுதான் நினைச்சிட்டு இருந்தேன். அப்போதுதான் பட வாய்ப்பு தேடி வந்தது. மலையாளம், தமிழ்னு பத்து படங்களுக்கு மேல நடிச்சிருக்கேன்.
ஃபேமிலி சப்போர்ட்..?
எனக்கு தமிழ் கொஞ்சம், கொஞ்சம்தான் தெரியும். எந்த மொழிப் படமா இருந்தாலும் துணிச்சலா நான் நடிக்க என்னுடைய அம்மாதான் காரணம். அவங்கதான் என்னை சப்போர்ட் பண்ணிட்டே இருப்பாங்க.
அறம் படத்துல உங்க ரோல் பற்றி..?
என்னுடைய கேரியர்ல வித்தியாசமான கேரக்டர். இதுவரைக்கும், அம்மா கேரக்டர்ல நடிச்சதே இல்ல. அறம் வாய்ப்பு வந்ததும் அம்மாவா என்னால நடிக்க முடியுமானு தயக்கம் இருந்துச்சு. சரி, வித்தியாசமா முயற்சி பண்ணி பார்க்கலாமேனுதான் ஒத்துகிட்டேன். ஆனா, இந்த படத்துல என் மனசுக்கு திருப்தியா நடிச்சிருக்கேன்.
அம்மாவா நடிச்ச அனுபவம்..?
எனக்கு இன்னும் திருமணம் ஆகல. அம்மா – பிள்ளை உறவு எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது. ஆனா, இந்தப் படத்துல நிஜமாவே அம்மாவா பீல் பண்ணி நடிச்சேன். அந்தப் பசங்களும் என் கூட ரொம்பவே குளோஸ் ஆகிட்டாங்க. இப்போ மக்கள் என்னை ‘சுமதி’யா கொண்டாடுறாங்க.
நயன்தாரா கூட நடிச்சது பற்றி..?
தமிழ்நாட்டுல லேடி சூப்பர் ஸ்டார் நயன். அப்படி எந்த பந்தாவும் அவங்ககிட்ட இருக்காது. ரொம்பவே சிம்பிளா இருப்பாங்க. என்னோட நடிப்பைப் பார்த்துட்டு நல்லா நடிக்குறீங்கனு பாராட்டுனாங்க.
ஸ்கிரீன்ல உங்களைப் பார்த்துட்டு உங்க அம்மா என்ன சொன்னாங்க..?
என்னை கட்டிப்பிடிச்சு பாராட்டினாங்க. இப்போ மம்மி ரொம்பவே ஹேப்பியா இருக்காங்க. என்னுடைய அம்மாவை நினைச்சுதான் அந்த ரோல் பண்ணேன். தாய்மை எவ்வளவு அழகானதுனு இப்போ புரிஞ்சிகிட்டேன்.
நீங்க ரொம்பவே கஷ்டப்பட்டு நடிச்ச சீன்..?
எனக்கும், அந்தக் குழந்தைங்களுக்கும் இடையே கெமிஸ்ட்ரி கொண்டு வர்றதுக்குதான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அம்மா, பொண்ணு ரிலேசன்ஷிப் ஸ்கிரீன்ல பார்க்கும் போது அவ்வளவு நல்லா இருந்ததுனா அதுக்கு எங்களுடைய கெமிஸ்ட்ரிதான் காரணம்.
நடிப்பைத் தவிர வேற என்ன பண்றீங்க..?
நடிக்க வந்ததுல இருந்து டான்ஸ் அப்பப்போதான் ஆட முடியுது. ஷூட்டிங் இல்லாதப்ப டான்ஸ் பண்ணுவேன். நடிப்பையும், டான்ஸையும் தவிர வேற எதுவும்பண்ணல.
அடுத்தும் அம்மாவா நடிக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சா நடிப்பீங்களா..?
கண்டிப்பா மாட்டேன். ஒரே ரோல் பண்றதுக்கு எனக்கு பிடிக்காது. வித்தியாசமா நிறைய ரோல் பண்ணனும் அதுதான் என் ஆசை. அதுக்காகத்தான் வெயிட் பண்றேன்.
எதிர்கால திட்டம்..?
இப்போதைக்கு எந்தப் படமும் கமிட் ஆகல. நல்லா மக்கள் மனசுல இடம் பிடிக்குற மாதிரி ஒரு கேரக்டர் அமைஞ்சா நிச்சயம் நடிப்பேன்.