தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் மணி சர்மாவும் ஒருவர். தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடத்திலும் நிறைய படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். அந்த வகையில், விஜயகாந்த் நடித்த நரசிம்ஹா படத்தில் தமிழுக்கு வந்த அவர், பின்னர் விஜய் நடித்த யூத், போக்கிரி, சுறா, தனுஷ் நடித்த படிக்காதவன், மாப்பிள்ளை விசால் நடித்த தோரணை உள்பட பல மெகா படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் கடைசியாக நகுல் நடித்த நாரதன் படத்திற்கு இசையமைத்தார்.
தற்போதும் தெலுங்கில் சில படங்களுக்கு இசையமைத்து வரும் மணிசர்மாவின் கைவசம் உள்ள படங்களுக்கு இசையமைத்து கொடுத்து விட்டு அடுத்த ஆண்டு முதல் படங்களுக்கு இசையமைப்பதில் இருந்து விலகிக்கொள்ள முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.