பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி, பாலிவுட்டில் 20 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். ஷாரூக்கான், நேற்று தனது 52வது பிறந்தநாளை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷாரூக்கானிடம், பிறந்தநாள் வாழ்த்து குறித்து கேட்டபோது, “முன்பு தான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் எல்லாம் தேவைப்பட்டது. ஆனால் இப்போது கடவுள் எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். நான் வேண்டுவது எல்லாம், என் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது தான்” என்று கூறியுள்ளார்.
ஷாரூக்கான், தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் குள்ள மனிதராக நடிக்கிறார். படம் அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸாகிறது.