கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நரகாசூரன்’ திரைப்படம், இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘நரகாசூரன்’ படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. சந்தீப் கிஷன் மற்றும் ஆத்மிகா இருவருடைய காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரவிந்த்சாமி, ஸ்ரேயா மற்றும் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமார் ஆகியோர் பங்கேற்ற அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்றது.
“இன்னும் 4 நாட்களில் ஒட்டுமொத்த ‘நரகாசூரன்’ படப்பிடிப்பும் முடிவடையும்” என்று குறிப்பிட்டு, படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்ட படம், நவம்பர் மாதத்தில் முடிக்கவுள்ளது படக்குழு.
முன்னணி நடிகர்களை வைத்தும் கார்த்திக் நரேன் சரியாக திட்டமிட்டு முடித்திருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள். ‘துருவங்கள் பதினாறு’ போலவே ஊட்டி பின்னணியில் இப்படத்தையும் உருவாக்கி வருகிறார் கார்த்திக் நரேன்.
அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள்.

