இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய போட்டி தாமதமாக ஆரம்பமானது.
இன்றைய நாள் போட்டி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் நிறுத்தப்பட்டதால் , நாளை இடம்பெறவுள் இரண்டாம் நாள் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர ்ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய போட்டி இடைநிறுத்தப்படும் போது தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிவரும் இந்தியா அணி 3 விக்கட்டுக்களுக்கு 17 ஒட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ளாமல் சுரங்க லக்மால் வீசிய பந்தில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில் சிறப்பாக பந்துவீசிவரும் சுரங்க லக்மால் 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லோகேஸ் ராஹுல் எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ளாமல் ஆட்டமிழந்த நிலையில் , சிகர் தவான் 8 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.