நடிகர், நடிகைகள் என்றாலே சிலர் தவறான கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறார்கள். நடிகைகளின் புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் சிலரது அநாகரிகமான கமென்ட்ஸ் பலரையும் முகம் சுளிக்க வைக்கும்.
முன்னணி நடிகைகள் பலரது ட்வீட்களிலும் இந்த மாதிரியான அநாகரிகமான கமென்ட்ஸை பார்க்க முடியும். நடிகைகள் பலர் அதைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவதுண்டு.
பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி, தான் பதிவிட்ட புகைப்படத்திற்கு அப்படி வந்த ஆபாச கமென்ட்களுக்கு பதிலடி கொடுத்து ட்வீட் செய்துள்ளார்.
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் சுஜா வருணி. பாதியில் நிகழ்ச்சிக்கு வந்தவர் நிகழ்ச்சி முடிவதற்கு சில நாட்கள் முன்பு வரை நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக்பாஸுக்கு பிறகு சில படங்களில் நடித்து வருகிறார் சுஜா.
இந்நிலையில், சுஜா பதிவிட்ட புகைப்படங்களுக்கு ட்விட்டரில் சிலர் ஆபாசமான கமென்ட் அடித்துள்ளனர். அந்த ஸ்க்ரீன்ஷாட்டுகளை பதிவிட்டு அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சுஜா. இதுபோன்றவர்களுக்கு அஞ்சாதீர்கள், அவர்களை தைரியமாக வெளிக்காட்டுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார் சுஜா.
நான் நடிகை. எனது சாப்பாட்டை நான் பெருமையாகச் சாப்பிடுகிறேன். சினிமாவிலும், பொது நிகழ்ச்சிகளிலும் எந்த மாதிரியான உடை அணியவேண்டும் என்பது எனது விருப்பம். இந்த ஆடை தான் உங்களுக்கு பிரச்னையா? அப்படியென்றால் சிறு குழந்தைகளும் வல்லுறவு செய்யப்படுகிறார்களே ஏன்?”
நாங்கள் பிரச்னை இல்லை. நீங்கள் தான். உங்களது காம வெறி தான் பிரச்னை. இன்டர்நெட் எனும் மிகப்பெரிய உலகில் உங்களை மறைத்துக்கொள்ளலாம் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள்” என எச்சரித்துள்ளார்.