Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஆடவர் பிரிவில் பிரணாய் அதிர்ச்சி தோல்வி

September 14, 2017
in Sports
0
ஆடவர் பிரிவில் பிரணாய் அதிர்ச்சி தோல்வி

கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் பிரணாய் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 4-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் 17-ம் நிலை வீராங்கனையான ஹாங்காங்கின் செங் கன் யி-யை எதிர்த்து விளையாடினார். சுமார் 33 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-13, 21-8 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் 16-ம் நிலை வீராங்கனையான இந்தோனேஷியாவின் நிட்சோன் ஜின்டாபோலுடன் மோதுகிறார் சிந்து.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 46-வது இடத்தில் உள்ள இந்தியாவின் காஷ்யப், 28-ம் நிலை வீரரான சீன தைபேவை சேர்ந்த ஜென் ஹாவுடன் மோதினார். 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காஷ்யப் 21-13, 21-16 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். காஷ்யப் 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொள்கிறார்.

26-ம் நிலை வீரரான இந்தியாவின் சமீர் வர்மா, 8-ம் நிலை வீரரான தாய்லாந்தின் தனோங்சக்கை எதிர்கொண்டார். சுமார் 55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சமீர் வர்மா 21-13, 21-23, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் கால்பதித்தார். மற்றொரு ஆட்டத்தில் 17-ம் நிலை வீரரான சாய் பிரணீத் 21-15, 21-10 என்ற நேர் செட்டில் 29-ம் நிலை வீரரான ஹாங் காங்கின் ஹூ யனைய வீழ்த்தினார்.

பிரணாய் தோல்வி

அதேவேளையில் இந்திய வீரர்களான சவுரப் வர்மா, பிரணாய் ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறினர். சவுரப் வர்மா 21-18, 13-21, 19-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நிஷிமோடோவிடமும், 18-ம் நிலை வீரரான பிரணாய் 17-21, 23-21, 14-21 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீரரான ஹாங் காங்கின் லாங் அங்குஸூடமும் தோல்வியடைந்தனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, சாட்விக் சாய்ராஜ் ஜோடி முதல் சுற்றில் 18-21, 19-21 என்ற செட் கணக்கில் போராடி ஹாங்காங்கின் யிங் சூட், டாங்க் சூன் மேன் ஜோடியிடம் தோல்வியடைந்தது. ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-9, 22-24, 21-12 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லி சியா யு, லீ ஷெங் மு ஜோடியை தோற்கடித்தது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 11-21, 10-21 என்ற நேர் செட்டில் கொரியாவின் கிம் டக் யங், சுங் எய் சியோக் ஜோடியிடம் வீழ்ந்தது.

Previous Post

திசாரா பெரேராவின் அதிரடி ஆட்டம்! உலக அணிக்கு வெற்றி

Next Post

லியாண்டர் பயஸ் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: ‘ஒரு ஜீரோவை’ மறந்துவிட்டதாக வழக்கறிஞர்கள் விளக்கம்

Next Post
லியாண்டர் பயஸ் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: ‘ஒரு ஜீரோவை’ மறந்துவிட்டதாக வழக்கறிஞர்கள் விளக்கம்

லியாண்டர் பயஸ் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: ‘ஒரு ஜீரோவை’ மறந்துவிட்டதாக வழக்கறிஞர்கள் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures