ரீ-என்ட்ரியில் தெனாலிராமன், எலி ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார் வடிவேலு. ஆனால் அந்த படங்கள் இரண்டுமே தோல்வியடைந்தன. தொடர்ந்து விஷால் நடித்த கத்திச்சண்டை, லாரன்சின் சிவலிங்கா ஆகிய படங்களில் காமெடியனாக நடித்தார் வடிவேலு. அதையடுத்து தற்போது விஜய்யின் மெர்சல் படத்தில் காமெடியான நடித்துள்ளார்.
இந்த நிலையில், சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கிறார் வடிவேலு. அப்படத்திற்காக தற்போது சென்னை பூந்தமல்லியில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. இந்த செட்டில் ஆகஸ்ட் 21-ந்தேதி முதல் புலிகேசி-2 படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
கடந்த சில மாதங்களாகவே சிம்புதேவனும், வடிவேலுவும் புலிகேசி-2 கதை தொடர்பாக தீவிரமாக விவாதித்து வந்தனர்.
